4. கார்டுகளுக்கான அறிமுகம் (INTRODUCTION TO CHORDS)
4. கார்டுகளுக்கான அறிமுகம் கார்ட் என்பது ஒரு ஸ்கேலில் இரு க்கும் ஸ்வரங் களின் செங்குத்து அமைப்பாகும். கார்டின் பயன்பாடு இணக்கம் (ஹார்மனி (Harmony)) . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்வரங்கள் ஒன்று சேறும் பொழுது கார்ட் உருவாகிறது. இசையில் ஒரு கார்ட் என்பது இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்புகள் ஒரே நேரத்தில் ஒலிப்பது போல் கேட்கப்படும் ஒரு இணக்கத்தின் தொகுப்பாகும். இவை உண்மையில் ஒன்றாக இசைக்கப்பட வேண்டியதில்லை மற்றும் ஆர்பெஜியோஸ் மற்றும் உடைந்த கார்டாகவும் வாசிக்கலாம் (இவை ஒரே நேரத்தில் அல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக இசைக்கப்படும் கார்டின் ஸ்வரங் களை உள்ளடக்கியது). நவீன மேற்கத்திய (Western), மேற்கு ஆப்பிரிக்க (Western African) மற்றும் ஓசியானிய (Oceania) இசையில் கார்ட் மற்றும் கார்டின் வரிசைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன , அதேசமயம் அவை உலகின் பல பகுதிகளின் இசையில் இல்லை. மேற்கத்திய பாரம்பரிய இசையில் , அடிக்கடி பயன்படுத்தப்படும் கார்டுகள் (chords) ட்ரையட்ஸ் (triads) ஆ கும் , ஏனெனில் இ தில் அடிப்ப்டை ஸ்வரம் ( ரூட் நோட் (root note)), அதிலிருந்து மேலே மூன்...